மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா திருமணம் ஆகாதவர். தன் சொந்த பந்தங்களை 20 வருடத்திற்கு மேலாய் பிரிந்து தனிக்காட்டு ராணியாக துணைக்கு தன் தோழி சசிகலாவை, அவரது குடுமபத்தை மட்டும் வைத்து இது நாள் வரை வாழ்ந்து வந்தவர்.
ஜெயலலிதா தான் நடிகையாக சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் விட்டு சென்றுள்ளார்.
அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே…அவரின் தாயார் பார்த்து பார்த்து மகளுக்கு கட்டிய போஸ் கார்டன் வீடு மிக முக்கியமானது.

அது யாருக்கு செல்லப்போகிறது என்ற வினா எழுந்ததற்கு…விடை, தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அருகிலே நிற்கும் விவேக் ஜெயராமனுக்குத்தானாம்.
அவர் வேறு யாருமில்லை…சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் மனைவி இளவரசியின் மகன் தான்.
ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஜெயராமன் , திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் மூன்று குழந்தைகளோடு தவித்துக் கொண்டிருந்த ஜெயராமனின் மனைவி இளவரசியை போயஸ் தோட்டத்திற்கு அழைத்துக்கொண்டார் ஜெயலலிதா. விவேக் அப்போது கைக்குழந்தை.
பள்ளிப் படிப்பு முடித்த விவேக், ஆஸ்திரேலியாவுக்கு சென்று பி.ஏ. ஃபைனான்சியல் அக்கவுண்ட்ஸ் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார்.
அதன்பின் புனேவில் எம்.பி.ஏ படிப்பை முதித்துவிட்டு வந்தபிறகு தான்,ஜாஸ் சினிமா பொறுப்பு தரப்பட்டது.
இவர் ஜெயலலிதாவின் முறைப்படி அறிவிக்கபடாத உண்மையான வளர்ப்பு பிள்ளை.
இவர் திருமணத்திற்கு கூட ஜெயலலிதா வர வில்லை என்பது கூடுதல் தகவல்.





No comments:
Post a Comment