அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் மகேஷ்பாபுவா?
mahesh-babu2
இந்நிலையில், மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல் ஒன்று வெளிவந்தது. இந்த படத்தின் கதை அஜித்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய ‘ரெட்ட தல’ என்ற படத்தின் கதை என்று கூறப்பட்டது.
அஜித்துக்காக எழுதப்பட்ட கதை மகேஷ்பாபுவுக்கு பிடித்துப்போனதால், இதில் நடிக்க மகேஷ் பாபு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவிருப்பது உண்மைதான். ஆனால், மகேஷ்பாபுவுக்கு கூறியது வேறொரு கதை என்றும், அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் மகேஷ்பாபு நடிக்கவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் மகேஷ்பாபு நடிக்கிறார் என்று வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்திதான் என்றும் கூறப்பட்டுள்ளது.
‘அகிரா’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பிசியாக இருக்கிறார். அதேபோல், தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் ‘பிரம்மோற்சவம்’ படத்தில் மகேஷ்பாபு பிசியாக இருக்கிறார். இவ்விரண்டு படங்களும் முடிந்தபிறகு இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment